Tuesday 1 April 2014

அமானுஷ்யம்(கனவில் பேய் காரணம் என்ன)

இந்த கனவிற்கான காரணம் என்ன.....

நானும் எனது அம்மாவும் பேருந்தில் பயணித்தபொழுது அப்பேருந்தில் நான்கு, ஐந்து சின்னபசங்களும் பேருந்தில் வந்தார்கள்.......,,அந்த நேரத்தில் சுற்றுபுரமும் ஒரே இருட்டா இருந்துது .....,சிறிது நேரத்தில் பேருந்து நிலை தடுமாறி ஓடியது டிரைவர் வண்டியை ஒரு கேட்டில் மோதிவிட்டார் ,,,,,அந்த நேரத்துல என் கூட பஸ்ல வந்த யாருமே அங்க என் கூட இல்ல நான் வந்த பஸ்சையும் காணோம் ....,,,,,

ஆனா நா மட்டும் அங்க மஞ்சள் , குங்குமம் எல்லாம் தூவி வெட்சிருந்த ஒரு சமாதி மேல போயி விழுந்த ஒடனே கேட் கிட்ட  பார்த்த என்ன விட்டுட்டு எங்க அம்மா ஒடுறாங்க.......,,,,, அந்த இடதுல ஒரு பெரிய சிலை இருந்துது அது பார்க்கவே ஒரே பயங்கரமா ,,,,,அதோட நாக்கு எல்லாம் வெளிய தொங்கிட்டு இருந்துது நான் ஒடனே அத பார்த்துட்டு வெளிய தப்பிச்சு ஓடிவறேன் ஒரு குட்டி சந்துகுள்ள ஓடி போகும் போது அங்க என்னோட அம்மா ஓடி போய்ட்டு இருக்காங்க நானும் அவங்க கிட்ட போறேன் அங்க ஒரு ஆளு திடீர்னு வராறு அவரு  எங்க ரெண்டு பேரையும் ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு  போனாறு அந்த வீட்டுக்குள்ள என் கூட பஸ்ல வந்த பசங்க எல்லாம் ரூம்ல படுதுட்டு இருக்குறதா  அந்த ஆளு சொலுறரு அப்புறம் எங்கள அந்த ரூம் குள்ள போகதிங்கணு சொல்லிட்டு  வெளியவே உக்கார வெச்சிட்டாறு ஏனு கேட்டா அந்த சுடுகாட்டுல இருக்குற பேயீங்கலாம் வந்து போகும்னு சொல்லிட்டு அவர் தூங்க போய்டறு நா அழுதுகிட்டே ஊக்கார்ந்துட்டு   வானத்த பார்த்தா அங்க ஒரு உருவம் அப்படியே காற்றுல போது அந்த சுடுகாடு கிட்ட போனவுடனே அந்த உருவம் அப்படியே மறஞ்சிடுது...........,
 நா அது வருதுணு அம்மா கிட பயந்துட்டே சொல்லும் போது ........,,,,,,,!!!!!! அது ஒண்ணும் பண்ணாது அவங்க எல்லாம் இறந்து போனவர்கள் அவங்க அப்படியே போயி சமாதில படுத்துக்கு வாங்கனு அந்த ஆளு சொன்னாரு   ...............ஒடனே அம்மா அந்த ஆளு கிட்ட ஏரியா ல ஒரு பொண்ணு ஏறந்துடுச்சே சாவு எடுதுட்டாங்களானு கேட்டாங்க அவனும் ஹ்ம்ம இப்பதான் எடுதங்கா னு சொலுறரு.

வாசகர்களுக்கு இந்த கனவிற்கான காரணமோ பலனோ தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ......

Saturday 16 June 2012

சினி ஸ்பாட்

பில்லா vs சகுனி :





ஜெயிக்க போவது யாரு....?
மேலும் சொடுக்கவும்




தல போல வருமா: அஜித் பேட்டி

“ தினமும் காலயில் கடவுளைள வேண்டும் போது என் ரசிகர்களு க்காகவும் வேண்டிக்கிறன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன் நாளைக்கு இல்லா மல் போவன் . ஆனா, ஒரூ அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரூ வேண்டுகோள் . உங்க தன்மானத்தை யாரூக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க . உங்க வேலைய 100 சதவிகிதம் ரசிச்சு  செய்யுங்க. நல்லாப் படிங்க . நான் பத்தாவது வைரக்கும்தான் படிச்சேன் . வாழ்க்கையில்கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்கைளக் கத்துக்கிட்டேன் .மேலும் சொடுக்கவும்

Friday 15 June 2012

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்


பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்:

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

நன்றி:http://rajamelaiyur.blogspot.in

Wednesday 13 June 2012

கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர்.... !

கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர்.... !

 கூகுள் தமிழ் எழுதிபோன்ற எந்த ஒரு இந்திய மொழி கூகுள் எழுதியையும் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,

1. கூகுள் தமிழ் எழுதியில் பழகி விட்டால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். கூகுள் எழுதி வசதி இல்லாத தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் மூளை குழம்பும்.ஒரு மொழியை எழுதுவதற்கான தட்டச்சு மென்பொருள் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. இந்த மென்பொருள்களை நிறுவனச் சார்பின்றி மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் இருப்பது முக்கியம்.



நன்றி:http://blog.ravidreams.net